Crab Delicacy

நண்டு முருங்கைக்கீரை மசாலா

 

முருங்கைக் கீரையும் நண்டும் செம்ம
காம்பினேஷன். இரண்டையும் சேர்த்து
சமைக்கும் போது சத்து முழுமையாகக்
கிடைக்கிறது. முருங்கைக் கீரையில்
புரதச்சத்து இரும்பு சத்து அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது.
நண்டில்  அதிக கனிமச்சத்துக்கள் உண்டு
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். செலினியம்
என்னும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம். காப்பர் ஜிங்க் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கான சிறந்த உணவு.
நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து,இதயநோய்களைத்தடுக்கும்.
எனவே நண்டை உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்
 
செய்முறை*
 
ப்ரஷ் நண்டு  6
பெரிய வெங்காயம்
நீளமாக நறுக்கியது 2
முருங்கைக் கீரை
சோம்பு  1 மேஜைக் கரண்டி
மிளகு 1 மேஜைக் கரண்டி
மஞ்சள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மல்லித்தூள் 1ஸ்பூன்
பச்சை அரிசி  2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
 
முதலில் நண்டை நன்றாக ஆய்ந்து உப்பு
மஞ்சள் போட்டு கழுவி வைக்க வேண்டும்.
முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தமாக
கழுவி வைக்க வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும்
கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு
போட்டு பொரிந்ததும் நறுக்கிய  வெங்காயத்தைப் போட்டு வதக்கி பின்
கீரையைப் போட்டு வதக்கி மிளகாய்தூள்
மல்லி மஞ்சள் உப்பு சேர்த்து அத்துடன்
கழுவி வைத்த நண்டு துண்டங்களைப்
போட்டு  குலுக்கி வி்ட்டு மூடி சமைக்கவும்.
தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து
அரிசியை வறுத்து எடுக்கவும் பிறகு மிளகு
சோம்பு தனித்தனியாக வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் இட்டு அரைக்கவும். பவுடரானதும் கடாயில் வெந்த நண்டு கீரையுடன் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். வெகு சீக்கிரத்தில் நண்டு வெந்து விடும்.மணமணக்கும் நண்டு டெலிகஸி  ரெடி. நீங்களும் ட்ரை
செய்து பாருங்கள். விடவே மாட்டீங்க.
 
 

We will be happy to hear your thoughts

Leave a reply

Manohari Madan
Logo
Reset Password